பிக்பாஸ் சீசன் 14ல் எல்லோருக்கும் தனி பெட் தான்...!போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி...!

பிக்பாஸ் சீசன் 14ல் எல்லோருக்கும் தனி பெட் தான்…!போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி…!

திரையரங்கம்

ஹிந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ்-14 நிகழ்ச்சியில் டபுள் பெட் பயன்படுத்த கூடாது என புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மக்களிடையே மிகவும் நல்ல வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸும் ஒன்று தான். பல மொழிகளில் நடத்தப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சியை அந்தந்த மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகர்கள் தொகுத்து வழங்குகின்றனர். அந்த வகையில் ஹிந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபல நடிகர் சல்மான்கான் தான் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் 13 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், பிக் பாஸ் சீசன்-14க்காக கரோனா காரணமாக மக்கள் நீண்ட காலமாக காத்துக் கிடக்கின்றனர்.

கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட பிக் பாஸ் சூட்டிங் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 14ல் டபுள் பெட் கொண்ட கட்டில் பயன்படுத்த புதியதாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, போட்டியாளர்கள் எல்லாரும் தனி கட்டில்கள் தான் பயன்படுத்த வேண்டும் என்றும் ஒரு பெட்டில் இரண்டு பேர் தூங்கக்கூடாது என்றும் தட்டு, கண்ணாடி உள்ளிட்ட எந்த பொருட்களையும் பகிர்ந்துக் கொள்ள கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் வாரத்துக்கு ஒரு முறை போட்டியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. விரைவில் தொடங்க உள்ள இந்த பிக் பாஸ் சீசன் 14ல் மோனலிசா, சித்தார்த் சுக்லா உள்ளிட்ட இன்னும் பல பிரபலங்கள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *