உலகமெங்கும் அவரது குரலால் பல கோடி ரசிகர்களை சேர்த்தவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா காரணமாக உடல்நல குறைவால் மாரடைப்பு வந்ததால் நேற்று மதியம் 1.04 மணி அளவில் உயிர் இழந்தார்.
இவரது உடல் மருத்துவமனையில் இருந்து அவரின் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அதன்பின் நேற்று இரவு 8.00 மணி அளவில் எஸ்.பி.பியின் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரின் பண்ணை வீட்டிற்கு எடுத்த செல்லப்பட்டுள்ளது.
இறுதி சடங்குகள் அவருக்கு நடைபெற்று வரும் நிலையில், எஸ்.பி.பியின் உடலுக்கு நேரில் சென்று இளைய தளபதி விஜய் அவர் தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.
இதோ புகைப்படங்கள்….
#RIPSPB sir 😭🙏pic.twitter.com/aUWWdYOPMj
— Vijay Fans Trends (@VijayFansTrends) September 26, 2020