ஓமம் மற்றும் கருப்பு மிளகு இரண்டுமே நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுப் பொருட்கள்.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல வழிகள் இருந்தாலும் நம் பாரம்பரிய உணவு பொருட்களான ஓமம் மற்றும் கருப்பு மிளகு இரண்டையும் கலந்து செய்யும் தண்ணீர் எப்போதுமே நன்மை அளிக்கக் கூடியது. இந்த நோயெதிர்ப்பு சக்தி பானத்தை நீங்கள் எளிதாக செய்து விடலாம்.
இந்த பானத்தைக் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் என்ன என்பது பற்றியும், இந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்பது குறித்தும் விளக்கமாகப் பார்க்கலாம்.
ஓமம் மற்றும் கருப்பு மிளகு அடங்கிய தண்ணீர்
தேவையான பொருட்கள்
1/2 அங்குல இஞ்சி வேர்
1 தேக்கரண்டி கருப்பு மிளகுத்தூள்
1 தேக்கரண்டி ஓமம்
தயாரிக்கும் முறை
ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் ஒரு கப் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதில் கருப்பு மிளகுத்தூள், ஓமம் மற்றும் இஞ்சி வேர் இவற்றை சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும். பிறகு அதை நன்றாக கொதிக்க வையுங்கள். பிறகு அதை 2-3 நிமிடங்கள் நன்றாக கலக்குங்கள். பிறகு அதை ஒரு கோப்பையில் வடிகட்டி சிறிது தேன் சேர்த்து தேநீராக பருகலாம்.
இந்த மூலிகை பானம் உங்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் உதவியாக இருக்கும். இதை எடுத்துக் கொள்ளும் போது நீங்கள் எப்போதும் உபயோகிக்கும் மருந்துகளை தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் உங்களுடைய உணவுகளை லேசாக எடுத்துக் கொள்ளுங்கள்.
ஓமம் மற்றும் கருப்பு மிளகு இரண்டுமே ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டவை.
இது நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமின்றி குளிர் மற்றும் இருமலுடன் கூடிய அறிகுறிகளை எளிதில் சரிசெய்ய உதவுகிறது.
இது தொண்டை புண் குணமடைய உதவுகிறது. மூக்குச் சளியை வெளியேற்றுகிறது. ஓமம் சேர்க்கும் போது அஜீரணம், வாயு மற்றும் வயிற்று வீக்கத்திற்கான பிரச்சினைகளுக்கு முற்றிலும் தீர்வளிக்கிறது.
இஞ்சியை இதில் சேர்ப்பதால் அதன் மருத்துவ பண்புகளும் இதில் உள்ளன. எனவே இந்த பொருட்கள் எல்லாம் சேர்த்து தயாரிக்கும் பானம் நம் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.