
நாம் ஆரோக்கியமாக வாழ கீரைகள், காய்கறிகளையும் போல பழங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. எல்லா பழங்களும் உடலுக்கு எதோ ஒரு விதத்தில் நன்மைகளைத் தான் தருகின்றன. அவ்வாறு நன்மை தரும் பழங்களில் ஒன்றான கொய்யா பழத்தை தினமும் சாப்பிட்டால் உடலில் ஏராளமான அற்புதங்கள் நடக்கும் என்பது தெரியுமா? அந்த அற்புதங்கள் என்னவென்று பார்க்கலாம்.
தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவதானால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தினம் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள உஷ்ணம் குறைந்து உடலானது குளிர்ச்சி அடையும்.
தினமும் இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை என்பது எப்போதுமே இருக்காது.
கொய்யா பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே கடித்து சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும்.
மூல நோய் உள்ளவர்களுக்கும் கூட கொய்யா ஒரு நல்ல தீர்வு தரும்.
கொய்யா சருமத்துக்கு மிகவும் நல்லது. முகத்திற்கு பொலிவை தருவதோடு மட்டுமின்றி தோல் வறட்சியையும் நீக்கும்.
Leave a Reply