13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டது.
டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. சவுரவ் திவாரி 42 ரன்களும், டி காக் 33 ரன்களும் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை கொடுத்தாலும், அம்பத்தி ராயுடு மற்றும் டூ ப்ளஸி நின்று ஆடி அணியை வெற்றிக்கு உதவினர். இதையடுத்து, இறுதியில் கடைசி வரை நின்ற டூ ப்ளஸி சென்னை அணி வெற்றிபாதைக்கு அழைத்து சென்றார்.
இதனால் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. இதனை கொண்டாடும் விதமாக இணையத்தில் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் ட்ரோல் காட்சியையும், மீம்ஸ்களையு தெறிக்க விட்டு வருகின்றனர். இதோ அந்த வைரல் ட்ரோல் காட்சி…