தானம், தர்மம் அதிகம் செய்பவர்களா நீங்கள்… இந்த மூன்று பொருட்களை மட்டும் எக்காரணம் கொண்டும் தானம் கொடுக்காதீர்கள்… அப்படி கொடுத்தால் உங்கள் வாழ்க்கையில் என்ன விபரீதம் நடக்கும் தெரியுமா…?

தெய்வீகம்

இந்த பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் எப்பொழுதும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும்படி படைக்கப்பட்டது. எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விட்டால் மனிதர்களுக்கு மற்றவர்களின் தேவையும், அருமையும் புரியாமல் போய்விடும் என்பதற்காகத்தான் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு குறையுடன் படைக்கப்படுகின்றனர்.

 

ஒருவரின் குறையை மற்றொருவர் போக்க வேண்டும் என்பதற்காகத்தான் தானம் கொடுக்கும் முறை உருவாக்கப்பட்டது. மற்றவர்களுக்கு தானம் அளிப்பதினால்  நமக்கு மன நிம்மதி, புகழ் ஆகியவை தேடி வரும். குறிப்பாக அன்னதானம் செய்வதால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் அனைத்தும் தீரும்.

முக்கியமாக பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். அன்னதானம் செய்பவரை வெயில் வறுத்தாது. வறுமை தீண்டாது. இறையருள் எப்பொழுதும் அவருக்கு துணையாக நின்று மனதில் மகிழ்ச்சி எப்போதும் நிலையாக குடிகொண்டிருக்கும்.

அதே நேரம் சில பொருட்களை மட்டும் நாம் எப்போதும் தானம் அளிக்கவே கூடாது. அதை மீறி அதனை தானமாக கொடுத்தால் நமக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படும். என்னென்ன பொருட்களை தானம் அளிக்கக்கூடாது என்பதை இங்கே பார்க்கலாம்.

கூர்மையான பொருட்களான கத்தி, கடப்பாறை, ஊசி போன்ற பொருட்களை எப்போதும் மற்றவர்களுக்கு தானமாக கொடுக்காதீர்கள். ஏன் எனில் கெட்ட பலன்கள் உங்கள் வீட்டை தேடி வரும்.

பழைய உணவுகளை தானமாக கொடுத்து விடாதீர்கள். அப்படி கொடுத்தால் வரவுக்கு மீறிய செலவுகள் வரும்.

மகாலட்சுமி வாசம் செய்யக்கூடிய துடைப்பத்தை தானமாக கொடுக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் வீட்டில் எப்போதும் பணப்பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். எனவே எந்த சூழ்நிலையிலும் இந்த மூன்று பொருட்களை மட்டும் தானமாக கொடுத்து நீங்களே சிரமங்களை விலை கொடுத்து வாங்கி கொள்ளாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *