கணவரை இழந்த பெண்கள் பொட்டு வைக்க கூடாது ஏன் தெரியுமா… அப்படி வைத்தால் என்ன விபரீதம் நடக்கும் தெரியுமா…?

தெய்வீகம்

நம்முடைய முன்னோர்கள் அன்றாட பழக்க வழக்கங்கள் என்ற பெயரில் பல அறிவியல் பூர்வமான உண்மைகளை நமக்கு வகுத்து கொடுத்துள்ளனர். சடங்கு என்ற பெயரில் எத்தனையோ முறைகளை செய்கிறோம்? ஏன் என்று கேட்டால் தெரியாது. நமக்கு தெரியாமலே நாம் செய்து வருகிறோம்.

ஆண் பெண் என எல்லோருமே பாரபட்சமின்றி நெற்றியில் பொட்டு வைப்போம். அதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? இரண்டு புருவங்களுக்கு மத்தியில் நமது உயிர் ஓட்டத்தை தூண்டும் ஆக்கினை என்னும் மையம் உள்ளது.

அதைத் தொட்டு தூண்டும் விதத்தில், அங்கே உருவாகும் வெப்பதை கட்டுப்படுத்தும் பொருட்டும், ஆண் பெண் அனைவரும் நெற்றியில் பொட்டு வைப்போம்.

ஆனால், திருமணமான பெண்கள் மட்டும் திருமணத்திற்கு பிறகு நெற்றி வகுட்டில் பொட்டு வைப்பார்கள். அது ஏன் என்பது தெரியுமா?

நெற்றி வகுடு பகுதியில் பெண்கள் தொட்டு, பொட்டு வைப்பதால், அவர்களின் உடலில் அவர்களுக்கே தெரியாமல் சில மாறுதல்கள் ஏற்படுகிறது. அவர்களின் உடலில் சில சுரப்பிகள் தூண்டப்படுகிறது.

நெற்றி வகுடுவில் தினமும் பொட்டு வைப்பதால், அவர்களுக்கு பாலியல் சுரப்பி நன்கு தூண்டப்படுகிறது. அதே போன்று, கர்ப்பபையும் நன்றாக வலுவடைகிறது.

திருமணத்திற்கு பிறகு, பெண்களுக்கு இல்லற உறவில் நல்ல ஆர்வம் வருவதற்கும், கர்ப்பபை வலு பெறவேண்டும் என்பதற்காகவும் தான், நெற்றி வகுடுவில் பொட்டு வைக்கும் முறையை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

அதன் காரணமாகத்தான், வளைகாப்பு செய்யும் போது, அனைவரையும் கூப்பிட்டு நெற்றி வகுடுவில் பொட்டு வைத்து தொட்டு ஆசிர்வாதம் செய்ய சொல்கிறார்கள். இதனால் கர்ப்பப்பை வலுபெறுகிறது. கர்ப்பப்பை வலுபெற்றால், குறை பிரசவம் உண்டாகாது. நிறை மாதமாக இருக்கும் போது சுகபிரசவம் ஏற்படும்.

கணவரை இழந்த பெண்ணிற்கு பாலியல் சுரப்பி தூண்டப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அவர்களின் நெற்றி வகுடுவில் பொட்டு வைக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால், பின்னால் வந்தவர்கள் அந்த விஷயம் தெரியாமல், கணவனை இழந்த பெண்கள் பொட்டே வைக்க கூடாது என்று மாற்றி விட்டனர். இரு புருவ மத்தியில், ஆண் பெண் அனைவரும், எல்லா நாளிலும் பொட்டு வைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *