புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவ உணவு சாப்பிடக் கூடாது என தெரியுமா… புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஏன் பெருமாள் வழிபாடு சிறந்தது தெரியுமா…?

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவ உணவு சாப்பிடக் கூடாது என தெரியுமா... புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஏன் பெருமாள் வழிபாடு சிறந்தது தெரியுமா...?

புரட்டாசி மாதம் வந்துவிட்டது என்றாலே அனைவருக்கும் அசைவ உணவு சாப்பிட முடியாது என்ற வருத்தம் இருக்கும். அதோடு புரட்டாசி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் திருவிழாக் கோலம் தான். அதிலும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் புரட்டாசி மாதத்தில் திருமலைவாசனின்  பிரம்மோறச்சவம், கருடசேவை என திருவிழாக்கள் அங்கு களைக்கட்டும்.

புரட்டாசி மாதம் என்பது பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டது. இந்த மாதத்தில் பெருமாளுக்கு மட்டுமில்லாமல், அம்பாளுக்கு உகந்த நவராத்திரி, சிவனருளைப் பெற்றுத் தரும் கேதாரி  கௌரி விரதம் என தெய்வங்களின் அருளும், பித்ருக்களின் ஆசியும் ஒருங்கிணைந்து கிடைப்பது மிகுந்த சிறப்பம்சமாகும்.

இந்த புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டு திருக்கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்வதால் சகல நலன்களும்  கைகூடும் என்பது ஐதீகம்.  புரட்டாசி மாதத்திற்குரிய அதிபதி யாரென்றால் புதன் கிரகம். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபமாகும்.

அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளுக்குரிய மாதம். புதன் சைவ கிரகம். ஆதலால்தான் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என்று கூறுகிறார்கள். அந்த மாதம் முழுவதும் பெருமாளை நினைத்து விரதமிருக்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகின்றது.

புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வது மிகுந்த சிறப்பத் தரும். புரட்டாசி சனிக்கிழமைகளில் திருப்பதி சென்று வழிபாடு செய்வது  மிகவும் சிறப்பாகும். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைத்து விரதமிருந்து வழிபட்டு வந்தால் சனி தோஷம் நீங்கும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*