ரசிகர்கள் எல்லோரும் கொண்டாட ரெடி ஆகி உள்ளார்கள்...!மாஸ்டர் படம் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது...!

ரசிகர்கள் எல்லோரும் கொண்டாட ரெடி ஆகி உள்ளார்கள்…!மாஸ்டர் படம் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது…!

திரையரங்கம்

தமிழ் சினிமாவையே மீண்டும் தூக்கி நிறுத்தப்போகும் சக்தி தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்துக்குத்தான் என அனைத்து தியேட்டர்காரர்களும் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

கொரோனா தொற்றால் எதிர்பாராத சூழ்நிலையில் தியேட்டர்கள் இழுத்து மூட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப் பட்ட நேரத்தில் கைவசம் உருவாகி ரிலீசுக்கு ரெடியாக இருந்த இரண்டு திரைப்படங்கள் சூரரைப்போற்று மற்றும் மாஸ்டர்.

ஆனால் சூர்யா தனது சூரரைப்போற்று படத்தை அமேசான் தளத்தில் அக்டோபர் 30-ஆம் தேதி வெளியிடவுள்ளார். இதற்காக சம்பந்தப்பட்ட தியேட்டர்காரர்களுக்கும் சூர்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்ற எந்த ஒரு அறிவிப்பும் தற்போது இல்லாததால் சூர்யா அத்தகைய முடிவை எடுத்தார். இது ஒருபுறமிருக்க விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்திற்கும் இதே நிலைமைதான் என்று கூறினார்கள்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அக்டோபர் 15-ம் தேதியிலிருந்து தியேட்டர்கள் திறக்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்ததை தொடர்ந்து மாஸ்டர் படம் தியேட்டரில் தான் என்பதும் கன்ஃபர்ம் ஆகியுள்ளது.

மேலும் ரசிகர்கள் தீபாவளிக்கு எதிர்பார்த்தாலும் மாஸ்டர் படம் 2021 பொங்கலில் தான் வெளியாகும் என்கிறது சினிமா வட்டாரம். படத்தின் தயாரிப்பாளரும் அந்த முடிவைத்தான் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *