மாஸ்டர் படம்தான் வேண்டும் என்று சொன்ன தியேட்டர் உரிமையாளர்கள் அந்தப்படம் வேண்டாம் என்று இப்போது சொல்கிறார்கள்... அதற்கு பதிலாக எந்த படத்தை கேட்கிறார்கள் தெரியுமா...?

மாஸ்டர் படம்தான் வேண்டும் என்று சொன்ன தியேட்டர் உரிமையாளர்கள் அந்தப்படம் வேண்டாம் என்று இப்போது சொல்கிறார்கள்… அதற்கு பதிலாக எந்த படத்தை கேட்கிறார்கள் தெரியுமா…?

திரையரங்கம்

கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் அவர்களது தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் அவர்கள் பெரிதும் நம்பியிருந்த முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசையாக OTT தளத்துக்கு சென்று கொண்டிருப்பதால் மேலும் கவலையில் உள்ளனர்.

இந்நிலையில் அரசாங்கம் வருகிற 15-ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டும் தியேட்டரை திறந்து கொள்ளலாம் என்ற அனுமதி அறிவிப்பை வெளியிட உள்ளது.

இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் அனைவரும் சுறுசுறுப்பாக ரிலீஸுக்கு தயாராகஉள்ள படங்களாக பார்த்து புக் செய்து வருகின்றனர்.

ஆனால் இதில் ஒரு ட்விஸ்ட் என்னவென்றால், இதுவரை விஜய்யின் மாஸ்டர் படம் தான் வேண்டும் என அடம் பிடித்த தியேட்டர்காரர்கள் அதிகமானோர் தற்போது மாஸ்டர் வேண்டாம் என்று கூறுகிறார்களாம்.

அதற்கு காரணம், சமீபத்தில் மிக வக்கிரமாக இணையதளங்களில் வைரலான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து படம் தான்.

இரண்டாம் குத்து படம் தான் எங்களுக்கு வேண்டும் என தியேட்டர்காரர்கள் அடம் பிடிக்கிறார்களாம். ஏற்கனவே இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மிகப்பெரிய வசூலை ஈட்டிய காரணத்தால் அந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *