நம்ம ராஜ்கிரணா இது? 50 வயதில் இரண்டாம் திருமணமா?அவரது மனைவி யார் தெரியுமா? இணையத்தில் வைரலாக பரவும் புகைப்படம்..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் 80கள் முதல் இன்று வரை நடித்துக் கொண்டிருக்கும் பல நடிகர் நடிகைகள் உள்ளனர். அன்று கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்தவர்கள் இன்று அப்பா அம்மா வேடங்களில் நடிக்கின்றனர். அந்த வகையில் இன்றும் தன் புகழ் மங்காமல் இருக்கும் ஒரு நடிகர் தான் ராஜ்கிரண்.

இவர் குணச்சித்திர வேடங்களில் அன்று முதல் இன்று வரை கலக்கிக் கொண்டிருக்கும் ராஜ்கிரண் பல படங்களில் கதாநாயகனாகவும் கலக்கியுள்ளார். எளிய குடும்பத்தில் பிறந்த இவர் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்துள்ளார்.

இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். இவரது உண்மையான பெயர் காதற் மொகிதீன். சினிமாவுக்கு வேண்டி தனது பெயரை ராஜ்கிரண் என்று மாற்றிக் கொண்டுள்ளார். இவ்வளவு புகழ் சினிமாவில் இருக்கு இருந்தாலும் இவர் 30 படங்கள் மட்டுமே நடித்துள்ளார்.

ஆரம்பத்தில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக இருந்துள்ளார். பின்பு தான் நடிகராக உருவெடுத்துள்ளார். இவர் நாயகனாக நடித்த அரண்மனைக்கிளி, என் ராசாவின் மனசிலே ஆகிய படங்கள் இன்றும் மக்கள் மத்தியில் பிரபலம். வெளியான சமயத்திலும் அதிரிபுதிரி ஹிட்டடித்தது.

பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நந்தா, சண்டக்கோழி, பாண்டவர் பூமி ஆகிய சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தனுஷ் இயக்கத்தில் இவர் கதாநாயகனாக நடித்த பவர் பாண்டி திரைப்படம் அசத்தல் ஹிட்டடித்தது.

இவரது முதல் திருமணம் இவரது மனைவியுடனான கத்ருது வேறுபாடு காரணாமாக விவகாரத்தில் முடிந்தது. பின்னர் ராஜ்கிரண் தனது 50வது வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது இவர்களது குடும்ப புகைப்படம் முதல் முறையாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *