தனுஷ் நடிப்பில் அவரது 43வது படத்தில் இணைந்த நமது அனைவருக்கும் பிடித்த மாஸ்டர் படத்தில் கலக்கிய குட்டி பவானி…

Uncategorized

சூப்பர் ஸ்டார் மருமகன் நடிகர் தனுஷ் அவர்களின்  43வது  படத்தில் இவர் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.நடிகர் தனுஷ், மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கர்ணன் வரும் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து தனுஷின் ஜ கமே த ந்தி ரம் திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படங்களை தொடர்ந்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் தனது 43வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் மகேந்திரன் நடிக்கவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. சமீபத்தில் மகேந்திரன் மாஸ்டர் படத்தில் சிறு வயது விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டை பெற்றார். இதனை தொடர்ந்து தற்போது தனுஷின் 43வது படத்தில் இணைந்துள்ளார்.

இதற்கிடையில் ஏற்கெனவே இப்படத்தின் படப்பிடிப்பு வி றுவி றுப்பாக நடைபெற்றது. அதில் கிட்டதட்ட தனுஷின் காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தனுஷ் தற்போது ஹாலிவுட் படமான ‘தி க் ரே மே ன்’யின்  படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *