இளநரை இல்லாமல் முடி அடர்த்தியாக கருப்பாக வளர கரிசலாங்கண்ணியை இப்படி பயன்படுத்துங்கள்...!

இளநரை இல்லாமல் முடி அடர்த்தியாக கருப்பாக வளர கரிசலாங்கண்ணியை இப்படி பயன்படுத்துங்கள்…!

ஆரோக்கியம் பாட்டி வைத்தியம்

இன்றையகாலக்கட்டத்தில் வைட்டமின்கள் குறைபாட்டாலும், மன அழுத்தம் மற்றும் இன்னும் சில காரணங்களால் பலருக்கும் இளநரை சாதாரணமாக வந்துவிடுகிறது.

இதற்கு முக்கிய காரணம் நாம் உண்ணும் உணவு தான். இப்பதிவில் இயற்கை முறையில் இளநரையை நாம் எப்படி சரிசெய்யமுடியும் என்பதை பற்றி பார்ப்போம்.

கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யில் 150 மில்லி கரிசலாங்கண்ணிச் சாறு இவை இரண்டையும் நன்றாக கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

கரிசலாங்கண்ணிச் சாறு 100 மில்லி, அறுகம்புல் சாறு 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 200 மில்லி இவையை சேர்த்து காய்ச்சி தைலப் பதம் வந்த உடன் அதை வடிகட்டி வைத்துக்கொண்டு தலைக்குத் தடவி வந்தால் பொடுகு தொல்லை நீங்கிவிடும். கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் இளமையில் தலை வழுக்கை நீங்கி முடி வளரும். நரையும் மாறிவிடும்.

மேலும், கரிசலாங்கண்ணிப் பொடியை ஒரு பருத்தியினால் ஆன துணியில் முடிச்சாக கட்டி விட்டு பெரிய பாத்திரத்தில் வைத்து நுனி முடிச்சு மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் சில தினங்கள் வைத்திருந்தால் எண்ணெய் நல்ல கருப்பு நிறமாக மாறிவிடும்.

பிறகு அதை எடுத்து வடிகட்டி இத் தைலத்தை தினமும் தலைக்குத் தடவி வந்தால் இளநரை வராது.

கரிசலாங்கண்ணி இலையை பல் துலக்கப் பயன்படுத்துவதால், பற்கள் மிகவும் உறுதியாகி விடும். ஈற்றில் உள்ள நோய் கிருமிகள் அழிந்து ஈறுகள் நன்றாக பலப்படும். தொண்டைச் சளி இருந்தால் கூட வெளியேறி விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *