அருவினா கீழ விழணும் ஆனால் கீழ்நோக்கி விழாமல் மேல் நோக்கி பறந்த அருவி..!! ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த சுவாரஸ்யம் வீடியோ இதோ..!!

காணொளி

ஆஸ்திரேலியாவில் சிட்னிக்கு அருகில் உள்ளது ராயல் தேசிய பூங்கா. இந்த பகுதியில் பெரும் மழை காரணமாக பலத்த காற்று வீசிவருகிறது. மணிக்கு சுமார் 70 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதால் மக்கள் யாரும் வெளியே செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராயல் தேசிய பூங்காவில் உள்ள அருவியில் இருந்து கீழே விழவேண்டிய நீர் பெரும் காற்று காரணமாக கீழே விழாமல் மலையின் உச்சியில் இருந்து மேல்நோக்கி பறக்கிறது. இந்த அதிசய நிகழ்வுக்கு காரணம் அங்கு வீசும் புயல் காற்று தான் என கூறப்பட்டுளளது.

மேலும், பெரும் காற்று காரணமாக நிகழ்ந்த இந்த அரிய நிகழ்வை பலரும் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *